ஏழ்மையான பெண் ஒருத்தி பகவான் கிருஷ்ணர் மீது மிகவும் பக்தி வைத்திருந்தாள். ஒருநாள் துவாரகை சென்ற அவள், கிருஷ்ணா, உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்? என்றாள். கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார், அதை செய்யலாம் என்று கருதித்தான் அவள் கேட்டாள். ஆனால் அவள் அதிர்ச்சியடையும் விதமாக ஒரு கோணிப்பையை அவளிடம் தந்த கிருஷ்ணன், நான் செல்லும் இடமெல்லாம் இதைத் தூக்கிக் கொண்டு வா! அது போதும்! இன்னொரு விஷயம், நம் கண்களை தவிர வேறு கண்ணிற்கும் இது தெரியாது! என்றார். திகைத்துப் போனாள் அந்தப் பெண். பக்திப்பூர்வமாக எதையாவது சொல்வார் என நினைத்தால், அழுக்கு மூட்டையை சுமக்கச் சொல்கிறாரே! என்று எரிச்சல் தோன்றினாலும், வேறு வழி இன்றி அதை அவர் செல்லும் இடம் எல்லாம் தூக்கிக் கொண்டு போனாள். பலமுறை அவள் சலித்துக் கொண்டபோதும், கிருஷ்ணர் எதுவும் சொல்லவில்லை. ஆனால், நிஜமாகவே அவள் சுமக்க சிரமப்பட்ட சமயங்களில் தானும் ஒரு கைகொடுத்து உதவினார். ஒருநாள், போதும் நீ சுமந்தது....