பணம் விஷயத்தில்
உஷாரா இருங்க மக்களே... எச்சரிக்கும் வங்கிகள்!
வாடிக்கையாளர்கள் இந்த விஷயங்களில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் எச்சரித்துள்ளன.
இந்தியாவில்
தற்போது கொரோனாபாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் பெரும்பாலான மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ள இந்த சூழலில் நிதி நெருக்கடியும் அதிகமாகியுள்ளது. பலருக்கு வேலையும் சம்பளமும் இல்லாமல் போயுள்ளது. அதையும் தாண்டி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நிதி ரீதியாகப் பலர் உதவி வருகின்றனர். இன்னொரு தரப்பினரோ சேர்த்து வைத்த பணத்தை அவசரத் தேவைகளுக்காகவும், தீடிரென ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்காகவும் வைத்திருக்கின்றனர். இதுபோன்ற சூழலில் வங்கி வாடிக்கையாளர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
bank
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பணத்தைப் பெறுவதற்கு QR code எதையும் ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் பணத்தைப் பெறுவதற்கு QR code ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை என வீடியோ ஒன்றையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவெளியிட்டுள்ளது. எனினும் பணம் அனுப்புவதற்கு QR code ஸ்கேன் செய்யலாம்.
போலியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்கும்படி பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்துள்ளது. வங்கி தரப்பிலிருந்து அழைப்பதாகக் கூறியும் பலர் இதுபோன்ற மோசடி வேலைகளில் ஈடுபடுகின்றனர்
வாடிக்கையாளர்கள் யாரும் தங்களது வங்கிக் கணக்கு மற்றும் தனிநபர் விவரங்களை யாரிடமும் பகிரவேண்டாம் என்று ஐசிஐசிஐ வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. தனிநபர் விவரங்களைத் திருடி பணம் திருடும் கும்பலிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி ஐசிஐசிஐ வங்கி எச்சரித்துள்ளது.
Comments
Post a Comment